ராவண சம்ஹாரத்திற்குத் தயாரான நிகழ்வுகள்!

297

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ  ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

(18) பரிகார ஸ்தல வரலாறு.  

 

ராவண சம்ஹாரத்திற்குத் தயாரான நிகழ்வுகள்! 

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ராமாவதாரத்தின் மகிமை பற்றியும், நடக்கப்போகும் நிகழ்வுகளின்  தெய்வீக உண்மைகளையும், மனதினால் முதன் முதலில் யாத்தவர் ஈஸ்வரனே ஆகும். அந்த அற்புத காவியத்தை ஈஸ்வரர் வாயால் சொல்ல முதலில் கேட்ட பெருமை அவரது துணையாகிய ஈஸ்வரியையே சாரும். “ராம” என்ற மந்திரம், ர் + ஆ+ ம என்பது முறையே, அக்னி, சூரியன், சந்திரன் என்பதாக தவமுறை அறிந்த ஞானியர்கள் அறிந்து இருந்தார்கள். ராம என்ற மந்திரத்தை  ஒரு முறை உச்சரித்தால் தேவ வேதமந்திர பாராயணம் ஆயிரத்தெட்டு தடவை ஜெபித்த பலாபலன் கிடைத்திடும் என்பது ரிஷிகளின் வாக்கு. காரணம் ராம மந்திரம் ஜெபம் செய்தால் திரிமூர்த்திகள் ஆகிய, பிரம்மா, விஷ்ணு, சிவம்  தேவர்களின்  அருளாசிகள் நிச்சயமாகக் கிடைத்திடும். ராமாவதாரம் விஷ்ணுவின் அம்சமாக, ராமன், பரதன், சத்ருக்ணன் லஷ்மணன் என்னும் விஷேசமான சக்திகளாக பூவுலகில் வெளிப்பட்டது. ராவணனை வதம் புரிந்திடும் அப்பாவி மனிதனாக, தெய்வீக குணங்கள் மிக்க அற்புதமான ஆற்றலாக, ஏகபத்தினி விரதனாக, பாசம், நேசம், அன்பு மிகுந்த நண்பனாக, ஆதரிக்கும் அன்பனாக, ரிஷி முனிவர் பணிந்தேத்தும் திவ்ய புருஷனாக, அவதாரங்களில் புண்ணிய தெய்வீகமாக, மந்திரங்களில் ராமரை விடவும் சிறப்புடைய, தேவாதி தேவர்களும் ஜெபம் செய்து ஆற்றலைப் பெருகின்ற “ராம” மந்திரமாக  விளங்கும் பெருமையை யாரால்தான் விளக்க முடியும்? ஆயிரம் நாவு படைத்த ஆதிஷேசனாலும் கூற முடிந்திடாத இதன் விஷேசத்தை உணரத்தான் முடிந்திடும்.  தேவர்கள் அனைவரும் ராம மந்திர ஜெபம் செய்து வேண்டுவன வேண்டியதை திருப்தியுடன் பெற்று சிறப்பை அடைந்தார்கள் என முற்றும் அறிந்துணர்ந்த தபஸ்விகள் உலகினுக்கு உரைத்தனர்.

 

இனி சொர்கத்திற்குத் தனது படைபலத்துடன் சென்ற ராஜன் ராவணனை தேவர்களும், நளமகா முனிவரும் வரவேற்று சிறப்புகள் செய்தனர். மகிழ்ச்சியுற்ற ராவணன் நளமகா முனிவரிடம் நரகத்தைத் தான் காண விரும்புவதாகவும், உடன்அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொண்டான். அவனது சகோதரன் விபீஷணனும் உடனிருந்தான். அனுமான் நளமகா முனிவரிடம் கேட்டுக் கொண்ட முக்கிய விஷயமே, ராவணனை எந்தக் காரணத்தை முன்னிட்டும் நரகலோகம் அழைத்துச் செல்லக் கூடாது என்பதுதான். தண்டணைக்கு ஆட்பட்டவர்களைத் தவிர வேறு யாரும் நரகலோகம் செல்ல இயலாது! ஏககாரணத்தை முன்னிட்டுப் பிறர் அங்கு செல்ல வேண்டும் என்றால் நளமகா முனிவரின் துணை இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். அப்படி ஓர் திருவருள் பெற்ற  மகா சக்தி உடைய தெய்வீக முனிவர் அவர்! ராவணனுடைய எதிர் காலத்தின் நிகழ்வுகளைப் பற்றி நன்கு அறிந்துணர்ந்திருந்த அவர், விபீஷணன் உடன் வருவதால் ராவணனின் மரணத்தை உறுதி செய்தபடி, நரகலோகம் அழைத்துப் போனார். அங்கு தனது மரணத்திற்குப் பிறகு தனக்கும் தனது இனத்தவர்கள் அனைவருக்கும், தண்டனை வழங்குவதற்காகப் புதிய நரகலோகம் ஒன்று சிருஷ்டிக்கப்படுவதை நேரில் கண்டு அதிர்ச்சியுற்றான். தன்னை எப்படியாவது இந்த இன்னலில் இருந்து காப்பாற்றும்படி ராவணன் கேட்டுக் கொண்டான்.

 

ராவணன் நளமகா முனிவரிடம், “ஐயனே அசுரர்கள் அனைவரது வாழ்விலும் இன்ப துன்பங்கள்  எத்தனை ஏற்பட்டாலும், கடைசிக் காலமாகிய மரணம் வரும் போது அது புனிதம் மிக்கதாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். ஆனால் அசுர இனம் நற்கதியை அடைய முடியாமல் போனதற்கு ஏதாவது இடையூறுகள் ஏற்பட்டுக் கொண்டே உள்ளது.  அதனை மாற்றியமைத்து ஜெகத்தில் முன் உதாரணமாகத் திகழ எண்ணுகிறேன். எனவே மரணம் இல்லாப் பெருவாழ்வை வாழ விரும்பும் எனக்குத் தங்களின் மேலான ஆலோசனை   ஏதாவது இருந்தால் கூற வேண்டும்” என்றான் பணிவுடன். அதனைக் கேட்டு அவன் சகோதரன் விபீஷணன் மகிழ்ச்சி உற்றான். ராவணனுக்கு அவனது உயிர் கேந்திரத்தை இடமாற்றி அதனை நாபிக் கமலத்தில் பாதுகாக்கும் வித்தையை உபதேசித்தார்.  “நரகலோகத்தில் மட்டுமே இறப்பிற்கு முன்னால் அங்கு வரும் சந்தர்ப்பம் வாய்த்த அதீத சக்தி பெற்றவர்களுக்குத்  தங்களது மரண ரகசியத்தை அறிந்து கொள்ளும் பாக்கியம் உண்டு. அப்படி அறிந்து கொண்டு விட்டால், உயிரை (அவ்வாறே) இடம் மாற்றி அமைத்துக் கொள்ள இயலும்” என நளமகா முனிவர் கூறினார். ராவணனது உயிர் பாதுகாப்பாக நாபியினுள் வைக்கப்பட்ட ரகசியத்தை விபீஷணன் நன்றாக அறியச் செய்தார். ஆஞ்சநேயர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, உயிர் ரகசியத்தை ராவணனிடம் மறைக்க இயலாத நளமகா முனிவர், ராவணவதம் ஏற்படக் காரணமானவனை அறிந்து கொண்டார்.

 

(குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தல வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

ஓம் ஶ்ரீ ஈஸ்வர குருநாதா சரணம் ஓம் குருவே துணை!

 

அருளாசிகள்,

தவத்திரு ஶ்ரீ நாகராஜன் சுவாமி,

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button