ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
10•11•2016,
வியாழக்கிழமை
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(133) மனிதனே புனிதன் —
மாந்திரீகர்! தாந்திரீகர்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மதுரையில் அனாதைப் பெரியவர் ஒருவர், இரண்டு கண்களையும் இழந்த அவர், யாசகம் எடுத்துச் சாப்பிட்டு வந்தார். பொள்ளாச்சிக்கு யாருடனோ சென்றவர் சந்தர்ப்ப வசத்தால் நமது நாகராஜ் சுவாமியை சந்திக்க நேர்ந்தது. சுவாமி வீட்டில் நடை பெறும் பெளர்ணமி அன்னதானத்தில் மூன்று நாட்களும் கலந்து கொண்டு உணவருந்தி, சுவாமி அவர்களின் உபதேசங்கள் கேட்டு, அவரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர்! மாதாமாதம் பெளர்ணமி சமயம் எங்கிருந்தாலும் சுவாமியைத்தேடி வந்து விடுவார். தெய்வீக நாட்டம் கொண்ட அவர் தனது பார்வை இன்மையை ஒரு
பொருட்டாகவோ அல்லது குறையாகவோ எண்ணுவதில்லை!
அவருக்கும் அன்னதானம் செய்திட ஆவல் பிறந்தது! யாசகம் பெற்றுத் தனது பசியைப் போக்கிய பிறகு மீதமாகும் பணம் ஒரு ருபாய், இரண்டு ருபாயைச் சேமித்து வரலானார். கொஞ்சம் பணத்தை சேமித்து வைத்துக்கொண்டார்.ஒரு மார்கழி மாதத்திய பெளர்ணமி தினத்தின் அன்னதானத்திற்கு வந்தவர் மிகவும் சந்தோஷமாக அதில் கலந்து கொண்டார்.
வீட்டின் பின்புறத்தில் இருந்த பெரிய இடத்தில் பந்தல் அமைத்துச் சமையல் செய்வார்கள். சமையல்காரர்கள், பரிசாரகர்கள், மற்றும் பக்தர்கள் அனைவரும் வந்து சேவைகள் செய்வார்கள். யாரும் கூலியாகப் பணம் பெற்றுக் கொள்ள மாட்டார்கள். சந்தோஷமாக அன்னதானம் நடை பெற்று வந்தது. திரு.கண்னையா அவர்கள் சிறு பணமுடிப்பைக் கொடுத்து அன்னதானத்திற்கு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பணமுடிப்பைப் பக்தர்கள் பிரித்து எண்ணினார்கள். பதினான்கு ரூபாய் எழுபது காசுகள் இருந்தன. சுவாமியும், நாச்சியாரும் மனம் நெகிழந்து தான் போனார்கள். எல்லோரும் பேச்சற்று ஸ்தம்பித்து நிற்க, ஏதும் பதில் கிடைக்காததால் தமது பணத்தை ஏற்க வில்லை என நினைத்து திரு.கண்னையா அவர்கள் குழந்தை போலத் தேம்பி அழ ஆரம்பித்து விட்டார். குழி விழுந்த கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. “என்னைப் போன்ற ஏழைகள் அன்னதானம் செய்யத் தகுதி இல்லையோ? எங்களுக்கெல்லாம் அந்தப் புண்ணியம் கிடைக்காதா?சுவாமி” என்று கதறி அழுதிடப் பரவசத்தில் எல்லோர் கண்களையும் குளமாக்கி விட்டார் மதுரைக் கண்னையா!
அவரிடம் எல்லோரும் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்கள். நிச்சயமாக அந்தப்பணம் அவருக்குத் தேவையாகத்தூன் இருந்திருக்கும். ஆனாலும் தரும சிந்தனை உடைய உயர்ந்த மனது அவரை சுயநலத்தில் விடவில்லை. அன்று திரு.கண்னையா அவர்களின் அன்னதானமாக எல்லோரும் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
மூன்றாவது நாள் சுவாமியைத்தேடி ஜடாமகுடதாரி ஒருவர் வந்தார். விபூதிப்பட்டை அணிவதற்கு பதிலாக சந்தனத்தினால் உடல் முழுக்கப் பூசியிருந்தார். நெற்றியில் மிகப் பெரிய குங்குமப்பூ பொட்டு. அவர் வந்து சுவாமியின் எதிரில் கம்பீரமாக அமர்ந்து, கால் மீது கால் தூக்கி வைத்து தக்ஷிணா மூர்த்தி சின்முத்திரை வைப்பது போல் வைத்தார். நமது சுவாமி நமஸ்காரம் என்று கூறியதும் ஏதும் பேசாமல் கண்களை மூடிக் கொண்டார்
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.
Comments are closed, but trackbacks and pingbacks are open.