பனங்காவில் யக்ஷ தரிசனம்!

287

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

20•01•2017,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(204) மனிதனே புனிதன் —
பனங்காவில் யக்ஷ தரிசனம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
செல்வி தேவயானி பெற்றோரை இழந்து பாட்டியின் ஆதரவில் பனங்காவில் வசித்து, வளர்ந்து கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தவர். கேரள மக்களுக்கு இயற்கை தந்த’ வரப்பிரசாதம் அழகு. தேவயானி தெய்வீக வடிவுடன், பார்த்தவுடன் கையெடுத்துக் கும்பிடும் அழகும் தேஜஸூம் பெற்று விளங்கினார். அனைவராலும் அன்புடனும், பண்புடனும் நேசிக்கப்பட்டார். சுருங்கக் கூறினால் இவரின் அழகில் மயங்கினார் அங்கே, அவ்விடத்தில் வசித்து வந்த துஷ்டகர்ம மாந்திரீகர் ஒருவர். செல்வி. தேவானையை அடைய எதனைச் செயல்படுத்தவும் சித்தமாகி விட்டார். இதனால் மனம் மிகுந்த பாதிப்பு நிலையை அடைந்தார் செல்வி.தேவானை.

மட்டுமல்ல காமாந்தகாரனாக வாழ்ந்து, நிறைவேறாத பெண்ணாசையினால் மடிந்து, அதே ஏக்கமுடன் ஓலமிடும் யக்ஷனாய் மாறிய துர்ராத்மா ஒன்றைத் தனது வசப்படுத்தினார் மந்திரவாதி! நடுஜாம வேளையில் போய் சுடுகாட்டில் பாவை செய்து, அதனுள் ஓலமிடும் யக்ஷனைச் செலுத்தி அவனுக்குக் “கரிச்சான் ரக்கன்” என்ற பெயருமிட்டு செல்வி.தேவானை மீது ஏவி விட்டார். மனதில் எவ்விதமான கல்மிஷமும் இன்றி வாழ்ந்து வந்த, தெய்வபக்தியுடைய செல்வி.தேவானையை, யக்ஷன் கரிச்சான்ரக்கனால் அணுக முடியாமல் பிடிப்பதற்காகக் காத்திருந்தான். பனங்காவு செல்லும் வழியில் உள்ள இச்சிமரத்தின் மீது தனது ஜாகையை ஏற்படுத்திக கொண்டு வழிமேல் விழிவைத்து ஏங்கி இருந்தான்.

இங்கு ஒரு முக்கியமான ஆன்மிகப் பாடம் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நமது தவத்திரு.ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்கள் அடிக்கடி என்னிடம் இது பற்றிக்கூறிக் கொண்டிருப்பார். ஆன்மிக நாட்டம் உடையவர்கள் அடிக்கடி தீபச்சுடரைக் கண்ணால் ஏக்கமுடன் பார்த்து கொண்டிருந்தாலே, மனதில் உருவாகும் தீய எண்ணங்கள் மறைந்து விடுமாம். எனது அனுபவத்திலும் இதனை அறிந்து கொண்டிருக்கிறேன். செல்வி.தேவானை அவர்களை யக்ஷன் நெருங்கமுடியாமல் போனதற்கும் காரணம், அவர்கள் விளக்கு வழிபாட்டைச் செய்து வந்தார்கள். மனதில் தூய்மையும், வாய்மையும் செல்வி.தேவானையின் ஆன்மிகத் சொத்தாகி விட்டது. பிறகு எப்படி அவர்கள் யக்ஷன் வசமானார்கள்?

காத்திருக்கும் தீமை சக்திகளும் கையைக்கட்டிக்கொண்டு சும்மா அமர்ந்திருப்பதில்லை. அது தனது ஏவல் எண்ணத்தை ஈடேற்ற முயற்சிகளைச் செய்து கொண்டும், தனது எண்ணத்திற்கொப்ப தன்னைப் போல் சலனமுள்ள மனதுடையவர்களையும் தனது காரியங்களுக்கு உதவியாகப் பயன்படுத்திக் கொண்டுமிருக்கும். இதுதான் அங்கும் நடைபெற்றன! யக்ஷன் கரிச்சான்ரக்கனுடைய பார்வை காமாந்தக எண்ணமுடைய வாலிபர்கள் மீது திரும்பியது.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Call Now Button