ஞானகுருவின் தெய்வீகம்!

269

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

28•12•2016,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(181) மனிதனே புனிதன் —
ஞானகுருவின் தெய்வீகம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°தவத்திரு.வேணுகோபால சுவாமி அவர்களின் பொள்ளாச்சி விஜயம், அநேக மனங்களில் புத்துணர்வை ஏற்படுத்தியது. காரணம் அவர் மனிதர்கள் நினைக்காத பிரபஞ்ச உண்மைகளைப் போதிக்கத் துவங்கியது தான். ஆரம்பத்தில் அந்த விஷயங்கள் புரியாது போனாலும், திரும்பத் திரும்ப
அதனையே கூறிப் பிறகு, அதற்கு விளக்கம் சொல்ல ஆரம்பித்ததும், படித்தவர்கள் மத்தியில் அவருக்கு ஒரு நல்ல மதிப்பை அக்கருத்துக்கள் உருவாக்கித் தந்தன. அவரை நமது நாகராஜன் சுவாமி அவர்கள் சந்திக்கச் சென்றார். அவர் தங்கியிருந்தது, பொள்ளாச்சி கடைவீதி டவுன் போலீஸ் ஸ்டேஷன் வீதியில் இருந்த திரு.ராமசாமி அண்ணார் வீட்டில் தான். தவத்திரு. வேணுகோபால சுவாமி அவர்களை நெருங்க முடியாதவாறு கடைவீதியில் உள்ள பக்தர்கள் சூழ்ந்திருந்தனர்.

நோய்நொடிகள் தீரவும், குடும்ப பிரச்சினைக்குத் தீர்வாகவும் அவர் விபூதியில் அபிமந்திரித்து அதனை அவர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். சிலர் விபூதிப் பாக்கெட் கொண்டுவந்து தரவும், அதனைப் பிரித்துத் தனது விரல்களை விபூதிக்குள் விட்டு ஜெபம் செய்து தரவும் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டனர். அவரிடம் அருள் ஆசிகளும் பெற்றுக் கொண்டு இருந்தனர். நமது சுவாமி ஓரமாக அமர்ந்து இந்நிகழ்வை, ஜெபம் செய்தபடி கவனித்துக் கொண்டிருந்தார். அங்கு தவயோகினி திருமதி.சுந்தரம்மாள் மற்றும் டாக்டர் திரு.ராஜசேகரன் அவர்கள் காணப்படவில்லை. ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு புறப்பட்டுச் செற்று விட்டதாகச் தகவல் கூறினர்.

இரண்டு தினங்கள் ஞானகுரு தவத்திரு. வேணுகோபால சுவாமி அவர்கள் பொள்ளாச்சிக் கிளை தியான சங்கத்தின் தலைவர் வீட்டில் தங்கியிருந்தார். இரண்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று தியானவகுப்பு நடைபெற்றது. கடவுள் வாழ்த்துப் பாடலைப் தொடர்ந்து, “ஓம் ஈஸ்வரா” என்று கோஷமிட்டனர். பிறகு கண்களை மூடி அப்படியே மெளனமாகத் தியானத்தில் அத்தனை பேரும் ஆழ்ந்து விட்டனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் அத்தனை பேரும் ஏதோ அமானுஷ்ய சக்திக்குக் கட்டுப்பட்டது போலவே, ஆடாமல், அசையாமல் அப்படியே நேரம் போவது தெரியாமல் அமர்ந்து இருந்தனர்.
பிறகு ஞானகுரு அவர்கள் “ஓம் ஈஸ்வரா ” என்று மிக நீளமான குரலில் அதிர்வு அலைகள் ஏற்படும் வண்ணம் குரல் ஒலிக்கக் கூறினார். அந்த தியான சபையே அவருக்குக் கட்டுப்பட்டுக் கண் விழித்தது, ஏதோ மாயாஜாலம் நடப்பதைப் போன்று தான் இருந்தது!

தியானத்தின் போது முதலில் பாடிய பாடலின் கருத்து ஒரு சங்கல்பமாக அமைந்து இருந்தது. அதன் கருத்து வருமாறு :
1.அம்மா, அப்பா முதல் தெய்வம்
2.தந்தை தாய் தொழல் முதற்கடமை.
3.பெற்றவர்களால் குருவருள் பெறுவோம்.
4.குருவினால் உலகம் அறிவோம்.
5.மகரிஷிகளின் அருள் ஒளி பெறுவோம்.
6.உடலின் உயிரே கடவுள்!
7.உணர்வின் அலையே ஆத்மா!
8. ஆத்மாவின் உரு, கருவுடல் செயல்.
9.வாழ்வில் உணர்வை உணர்ந்து,
ஒளியின் உணர்வாய்ப் பெறுவோம்.
10.குருவின் வழியில் மகரிஷிகள் அருள் ஒளி பெறுவோம்.
11. உடலின் வாழ்வில் புனிதம் 1பெறுவோம்.
12.உயிரின் ஒளியாய் நிலை பெறவே, உணர்வைப் புனிதம் செய்வோம்
13.உயிரின் ஒளியாய் நிலை பெற்று, விண்ணில் ஒளியை அடைவோம்.
14.குருவின் துணையால் விண்ணின் ஒளியை அடைவோம்.
15.புருவ மத்தியில் சூரியனை எண்ணிச் செயல்படுவோம்.

ஞானகுரு அவர்களின் தியானப்தாய், தந்தை
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Call Now Button