ஹிப்பிகளின் சொர்க்கபுரி!

297

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

29•10•2016,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(112) மனிதனே புனிதன் —
ஹிப்பிகளின் சொர்க்கபுரி!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நமது சுவாமி அவர்களின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கருதுகிறேன். இதில் அவர் எந்தவித பொழுது போக்குகளிலும் மனதினைச் செலுத்தி இருக்கவில்லை. சாமியார் மற்றவர்களுடன் கலகலப்பாகப் பேசியபடியே வந்தார். அவரிருக்குமிடம் ஜனரஞ்சகமான விஷயங்களும் பேசப்படும். “எல்லாம் பரமனின் சித்தம்”– இதுவே அவரது தாரக மந்திரம். ஆனால் நமது சுவாமியும் அவர்களிடம் பேசுவார். சுவாமி பேசுவது அவர்களுக்குப் பிடிக்க வேண்டுமே! நமது சுவாமியைப் பார்த்தவுடனேயே அச்சம் கலந்த மரியாதை அவர்களிடம் தோன்றிவிடும். ஆகவே சுவாமி எல்லா இடங்களிலும் தனிமையில் இருக்க வேண்டி இருந்தது!

பணம், பிரயாணப் பெட்டிகள் பத்திரமாக இருக்க வேண்டுமானால் சுவாமி தங்கும் அறைக்குள் வைத்துச் செல்லும் அளவுக்கு அவர்கள் எண்ணமும் செயல்பட்டது. அங்குள்ள கடற்கரையில் இருந்து பெண்கள் நெற்றிக்கு அணியும் பசையுடன் கூடிய பொட்டுக்கள் நிறைய வாங்கி வந்தனர். அதனைப்பற்றி கிசுகிசுப்பான குரலில் பேசிக் கொண்டனர். மைத்துனர் அவர்களுக்கு தேங்காய் லோடு ஏற்றித்தரும் பழனிச்சாமி என்பவர் சுவாமியிடம் உண்மைச் தகவலைத் கூறினார். “அவைகள் எல்லாம் உண்மையான நெற்றிப் பொட்டுக்கள் அல்ல! போதை தரும் வஸ்த்துகள். நாக்கில் ஒரு பொட்டு ஒட்டினால் விடியும் வரை போதையில் மிதக்கலாம்” என்று கூறிவிட்டார். “இதை விற்பவர்களைப் போலீஸ் துரத்திச் பிடித்துச் செல்கிறது” இந்தத் தகவலையும் கூறச் சுவாமி கேட்டுக் கொண்டார். பதில் கூற வில்லை.

அந்தக் காலகட்டத்தில் ஹிப்பீஸ் நாகரிகம் களை கட்டி இருந்த நேரம். சிற்றின்ப அனுபவத்தில் தான் பேரின்பம் கிடைக்கும் என்பதாகப் போதித்து வந்தனர். வரைமுறையற்று, வர்ஜா வர்ஜமின்றி எப்படியும் வாழலாம் என்ற கொள்கை மறைமுகமாகவும் பரவி வந்த நேரம். இதனை நமது சுவாமியிடம் சாமியார் மாதிரி தோற்றத்தில் இருந்த மருத்துவர் ஒருவர் சில உண்மைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் மாயா யோகினி எனப்படும் தீவிர பெண் சாமியார் ஒருவரிடம் தீக்ஷை பெற்றவர். கூட்டமாக நிர்வாணமாக அமர்ந்து உணவு உண்பது உண்டாம்! அது ஒருவகை யோகம் என்று கூறுவார்.ஏதோ குறிப்பிட்ட சக்திகள் பெறவே இப்படி நடந்து கொள்கின்றனர்

மார்கோவாவில் உள்ள சர்ச்சில் ஒரு மகானுடைய உடல் அப்படியே பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாகவும் பாலு கூறி சுவாமியை அழைத்துப் போனார். அங்கு பிரார்த்தனை நடந்தது. பிரார்த்தனை என்பது மெளன அஞ்சலி தான்! சுவாமிக்கு விவேகானந்தர் கூறிய வாசகம் மனதில் ஓடியது.
“உடலுக்கும் மனதினுக்கும் உள்ளே என்றும் அழிந்திடாத உண்மைப் பொருள் இருக்கிறது. அது இறப்பதும், பிறப்பதும் இல்லை. எங்கும் நிறைந்துள்ள அதற்கு உருவமும் இல்லை.”

ஆத்மாவின் பரம் பொருளைத் தேடியவரின் உடல் அப்படியே இருப்பதும் ஆச்சரியம் தரும் விஷயம்தான்.
கண்கள் எல்லாவற்றையும் காண்கிறது. கண்கள் காணும் எல்லாவற்றையும் மனம் கண்ட பின் எண்ணத்தை உருவாக்குகிறது. மனம் காண்பதன் முழுப் பொருளையும் ஆன்மா அறிகிறது. நமது சுவாமியின் தேடுதல்கள் அனைத்தும் வினாக்களின் வழியே தான். ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாக்கள் சிந்தனை சிகரத்தைத் தொட்டு விடும். ஆன்மாவின் சக்தியைப் பெற்றுப் பிறவாமை பெறும் நிலையைக் கூறுவார் உண்டு!

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Call Now Button