ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
22•10•2016,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
–
(105) மனிதனே புனிதன் —
சற்குருநாதரின் அன்புச் சீடன்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிரபஞ்சசக்தியின் ஏக்கம் என்பது
எங்கெங்கினும் காந்தசக்தியில் பரவி சிருஷ்டிக்கும் இறை சக்தியே! சிருஷ்டித்த சகல ஜீவர்களும் தமது ஏக்கமுடன் இறை சக்தியை எண்ணித் தமது எந்தக் காரியங்களுக்காகவும் வேண்டி, விரும்பி, நேர்மையுடன் பிரார்த்தனை செய்தால் நமக்கு உதவிகள் புரிகிறது.
இறைசக்தி சற்குருநாதரின் அறிவின் ஒளியாக, ஜெபமந்திர நாதமாக வெளிப்பட்டு, அவருடைய அருமைச் சீடர்களின் ஏக்கத்தை, அவர்கள் அடைய வேண்டியவற்றை அடைய, அவர்களுடைய நம்பிக்கையின் பேரில் உதவிகள் செய்கிறது. மற்றவர்களைப் பற்றிய விமரிசனம் செய்பவர்கள், மதிப்புக் குறைவாக எண்ணுபவர்கள், இறைசக்தியினிடம் நம்பிக்கை அற்றவர்கள், தன்னம்பிக்கை இழந்தவர்கள், ஆசானின் வார்த்தைகளில் எதிர்மறையாக எண்ணம் கொள்பவர்களிடம் அமானுஷ்ய சக்திகள் மிகவும் குறைந்த சக்தியலைகளை வெளிப்படுத்தும். அதனால் காரியத்தடைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
சற்குரு நாதரின் கருத்துக்கள், மற்றும் பாட போதனைகளை உள்ளன்புடன் நம்பி ஏற்றுக் கொண்டு செயல்படும், உண்மைச் சீடர்களிடத்தில் அது எல்லையற்ற சக்திகளாய் வளர்ந்து, வளர்த்துக் கொண்டே இருக்கும். மற்றும் அசரீரியாகத் தனது குருநாதரின் செய்திகளை உண்மைச் சீடனிடம் தந்து கொண்டும் இருக்கும். அப்படித்தான் நஞ்சன்கூடு ஷேத்திரத்தில் நமது சுவாமி டம் வந்து பல கருத்துக்களைக் கூறிக் கொண்டிருந்தவர் நமது சற்குரு நாதரின் மற்றும் ஒரு அருமைச் சீடராவார். அவரைப்பற்றிய நல்ல கருத்துக்கள் நமது நாகராஜ் சுவாமி அவர்கள் மனதில் உதயமாகியிருந்தது.
நவக்கிரகங்கள் தங்கள் சக்திகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தின் அருகே வந்ததும், பெரிய மீசை, தாடியுடன் கூடிய அவர் ஒரு கேள்வி கேட்டார். அது, “நமது சற்குருநாதர் எப்படி இருக்கின்றார்?” என்பதே! அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் ஒருங்கே நமது சுவாமி அவர்களிடம் ஏற்பட்டன. அவரின் நெற்றிக் பொட்டை ஊடுறுவிப் பார்த்தார்.
பிரகாசம் துலங்கியது. தான் மங்களூரைச் சேர்ந்தவர் என்றும், தமிழ்நாட்டில் குறிப்பாகப் பொள்ளாச்சியில் தனது உறவினர்கள் அரிசி வியாபாரம் செய்து வருவதாகவும் கூறினார். தனக்கு மகன் இருப்பதாகவும், வளையல் கடைகள் மங்களூரில் இருப்பதாகவும் சொல்லி சுவாமியை அன்புடன்
நோக்கினார். மீசையைப் பார்த்து சுவாமி வினாவியதும் நமது குருநாதரைப் போன்றே பெரிய மீசை வைத்திருப்பதாகக் கூறினார். நமது சுவாமியின் பிரயாணத்தில் அபூர்வ விஷயங்களை அறிந்து உலகினுக்குத் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தனது மீசையை தாடியை அங்கு நீக்கிக் கொண்டார். அவர் பழனி தவத்திரு.வேணுகோபால சுவாமியின் நண்பர் என்று கூறிக் கொண்டார். இன்னும் சில வருடங்கள் சென்ற பிறகு அவரை சந்திப்பீர்கள் என்றார். அவரது பெயர் என்ன? என்று சுவாமி கேட்டதும் நாராயணன் என்று சொல்லி விட்டு விடை பெற்றுக் கொண்டார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.
Comments are closed, but trackbacks and pingbacks are open.